இருநாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் தமிழகம் சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியுள்ள பகுதி ஒன்றிலுள்ள பள்ளியில் தொழுகையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாத்திமா பீவி கவர்னராக இருக்கும் போது ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டு அங்கு பணிபுரியும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அப்பகுதி முஸ்லிம்களும் தொழுது வருகின்றனர்.
தற்போது பிரதமரின் விஜயத்தை ஒட்டி அந்தப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்கள் உள்ளே சென்று தொழத் தடை விதித்து பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்துள்ளனர்.
இது பற்றி பகுதி முஸ்லிம்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு தகவல் தர மாநிலப் துணை பொது செயலாளர் செய்யது இக்பால் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் கேட்ட போது , அது எங்களின் தவறு அல்ல !தற்போது அந்த கவர்னர் மாளிகை மத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டப்பாட்டில் உள்ளது ! இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு வழக்கம் போல் அனுமதிக்கப் படும் ! என சொன்ன போது இக்பால் தனது கண்டனத்தை காவல் துறை அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளார்.
கண்டன சுவரொட்டி
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் பாபர் மஸ்ஜிதை இழந்த முஸ்லிம்கள் தற்போது காங்கிரஸ் பிரதமரால் இரண்டு நாள் வழிபாட்டு உரிமையை இழந்துள்ளனர். இவர்கள் ஆட்சியில் இரண்டு நாள் என்றால் நாளை அத்வானியோ, மோடியோ அந்த பிரதமராக வந்தால் நம் நிலை என்ன ? இந்திய அரசியல் சட்ட சாசனப்படி நம் வழிபாட்டு உரிமையை மறுக்க எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை என்பதை ஆளும் வர்கத்திற்க்கு அறிவிக்கவேண்டும் ! காங்கிரஸ் கட்சிக்கு நம் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். -செங்கிஸ் கான்.
அல்லாஹ்வின் பள்ளியில் அவன் பெயர் கூறி, அவனை துதிப்பதை தடுப்பவனை விட அநியாயக்காரன் யார்? அல்-குர்ஆன் {2;114}
இதேநேரம் தமிழகம் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான விஜய்காந்த் தலைமையில் அவரது கட்சியினர் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்வதாக முன்பே அறிவித்திருந்த நிலையில், இப் போராட்டத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.
இதே போல சென்னையிலும், சிவகங்கையிலும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தமிழ் தேசிய அமைப்புக்களும் பல்வேறு இடங்களில் சிறு சிறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற விடயங்களில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேவேளை பிரதமரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை மாலை சந்தித்துப் பேசினார். திங்கள் கிழமையன்று திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக கேரளா அமல்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் கேட்டுள்ளனர்.
தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருப்பதாகவும் அதனால் மேற்கு வங்கத்துக்கு கொடுக்கப்பட்டது போல சிறப்பு நிதியை தமிழகத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment