HIV தொற்றியவர்களை புறந்தள்ளுவதை தவிர்போம்! எய்ட்ஸ் தினத்தில் கருத்தரங்குகள்.
சர்வதேச எயிட்ஸ் தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஷஎச்.ஐ.வி. தொற்றை தடுப்போம், எச்.ஐ.வி. யினால் ஏற்படும் மரணங்களை தவிர்ப்போம், எச்.ஐ.வி. தொற்றியவர்களை புறந்தள்ளுவதை தடுப்போம்| எனும் தொனிப்பொருளில், எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் எச்.ஐ.வி. தொற்றிய 34 மில்லியன் பேர், கடந்த ஆண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமை, முழு உலகிற்கும் ஒரு சவாலாகும். சிறு பிள்ளைகள் கூட, இதற்கு ஆளாவது குறித்து, உலக சுகாதார ஸ்தாபனம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த செப்டெம்பர் மாதம் வரை எச்.ஐ.வி. தொற்றிய ஆயிரத்து 431 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளது, இவர்களுள் 52 பேர், சிறு பிள்ளைகளாவர். எச்.ஐ.வி. தொற்றிய 246 பேர், இதுவரை உயிரிழந்துள்ளனர். உரிய சிகிச்சையின்மையினால், எச்.ஐ.வி. தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெற வேண்டுமென, சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment