தனக்கு தனக்கு என்று வந்தால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்
பிரித்தானியாவிலிருந்து இயங்கும் GTV எனப்படுகின்ற தொலைக்காட்சி அதன் எல்லைகளைத் தாண்டி தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் , அப்பிரச்சாரங்களால் மக்கள் பிளவுபட்டுள்ளதுடன், சமுதாயம் தவறான வழியில் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜிரிவி தன் தவறை உணர்ந்து, தாம் தவறிழைத்துவிட்டதாக பிரித்தானிய ஊடக சட்டதிட்டங்களுக்கு அமைய பகிரங்கமாக அறிவிக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜரிவி தவறு செய்து விட்டாகவும் அதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் எனக் கோருபவர்கள் யாரும் அல்லர் புலிகளின் நெடியவன் குழுவினர்.
மாவீரர் தின நிகழ்வுகளின்போது மேற்படி தொலைக்காட்சி விநாயகம் தரப்பினருக்காக செயற்பட்டதாகவும் அவ்வாறு செயற்பட்டதனால் மக்கள் தவறான வழியில் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தனக்கு தனக்கு என்று வந்தால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் என்பார்கள். தற்போது ஜரிவி யின் செயற்பாடு தமக்கு ஆதரவாக அமையாததால் ஜரிவி ஊடக சட்டதிட்டங்களை மீறி சமூகத்தை தவறான வழியில் கொண்டு செல்வதாக புலிகளின் அனைத்துலகச் செயலம் சொல்கின்றது.
அதாவது புலிவால் ஊடகங்கள் யாவுமே தமது வருவாய்காக மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றது என்ற உண்மை புலிகளிடையே ஏற்பட்டுள்ள பிளவின் மூலமாவது மக்களுக்கு அறியகூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நெடியவன் தரப்பினரின் இணையம் ஒன்று என்ன சொல்கின்றதென்பனை கீழுள்ள படத்தை கிளிக்செய்வதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment