இந்த வாரம் அமெரிக்க வெளிவிவகாரகச் செயலர் ஹில்லாரி கிளின்டனின் மூன்று நாள் பர்மிய (மியன்மர்) பயணம் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கியி உடன் முக்கியப் பேச்சுக்களை நடத்தியது, “ஜனநாயக உரிமைகளுக்கு” அமெரிக்க ஆதரவு குறித்த பெரும் பாசாங்குத்தனப் பிரச்சாரதன்மையை கொண்டிருந்தது. ஆனால் கிளின்டன் வருகையின் உண்மையான நோக்கம ஆசியா முழுவதும் உள்ள சீனாவின் செல்வாக்கைக் குழிபறிக்கும் ஒபாமா நிர்வாகத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையை அதிகரிப்பதுதான்.
50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அமெரிக்க வெளிவிவகாரகச் செயலரின் இந்த பர்மா வருகை ஒபாமா தென் சீனக்கடல் பகுதி பூசல்கள் குறித்து சீனா மீதான அழுத்தங்களைத் தீவிரப்படுத்தி இருந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அம்மாநாட்டில் பர்மாவின் இராணுவக் குழு அமெரிக்காவுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும், பெய்ஜிங்கின் இறுக்கமான பொருளாதார மூலோபாய உறவுகளைத் தளர்த்திக் கொள்ளுவதற்கும் தயாராக உள்ளது என்ற அடையாளங்களை ஒபாமா பற்றி எடுத்துக் கொள்ளுவதில் உறுதியாக இருந்தார்.
பர்மாவிற்கு வருமுன் தெரிவித்த கருத்துக்களில், கிளின்டன் ஓர் உதவியளிப்பு மாநாட்டில் வளர்ச்சி பெற்றுவரும் நாடுகள் “திறமையான வாங்குபவர்களாக” இருக்க வேண்டும், நன்கொடை அளிப்போரிடம் இருந்து—சீனாவைப் போன்றவை—உதவி பெறுவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்; “நன்கொடை கொடுப்பவர்கள் உங்கள் தகமையைக் கட்டுமானம் செய்வதைவிட உங்கள் மூலவளங்களை எடுத்துக் கொள்ளுவதில்தான் அதிக அக்கறை உடையவர்கள்” என்றும் கூறினார். இச்செய்தி மற்ற நாடுகளுடன் பர்மாவிற்கும் கூறப்பட்டது; அது மிக அதிகமாகச் சீனப் பொருளாதர உதவி மற்றும் முதலீட்டை நம்பியுள்ளது.
இராணுவ ஆட்சிக்குழுவின் “உண்மையான நோக்கங்களைச் சோதிக்க” தான் வந்துள்ளதாக கிளின்டன் விளக்கினார்; வாஷிங்டனிடம் இருந்து கணிசமான சலுகைகளும் கிடைக்காது என்றார். பர்மிய ஜனாதிபதி தீன் சீனை வியாழன் அன்று அவர் நாட்டின் புதிய செயற்கைத் தலைநகரான நேபியடாவ் இல் சந்தித்து, சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டாலும், இவை “ஒரு ஆரம்பம்தான்” என்று எச்சரித்தார். கடந்த ஆண்டில் அரசு சூ கியியை இல்லக்காவலில் இருந்து விடுதலை செய்தது, ஒரு பொது ஜனாதிபதிக்குப் பெயரளவிலான அதிகாரத்தைக் கொடுத்துள்ளது, சூ கியி மற்றும் அவருடைய எதிர்க்கட்சியான NLD எனப்படும் தேசிய ஜனநாயகத்திற்கான குழுவை வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் நிற்பதற்கு அனுமதித்துள்ளது.
பர்மிய அரசாங்கம் வாஷிங்டனுடன் மீண்டும் சுமுக உறவுகளை அடைய ஆர்வம் கொண்டுள்ளது. அது நாடு பெய்ஜிங்கிடம் கொண்டுள்ள பெரும் நம்பக நிலைப்பட்டைக் குறைத்து, மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு கண்டு, நாட்டை மற்றொரு புதிய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக ஆக்கும். கிளின்டனின் வருகை “ஒரு வரலாற்று மைல்கல்” என்று விவரித்த தீன் சீன் இது உறவுகளில் “ஒரு புதிய அத்தியாயத்தைத் ஆரம்பிக்கும்” என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் நே ஜின் லட் இராணுவ ஆட்சியின் உந்துதல்கள் குறித்த சிலவற்றை டைம் சுட்டிக் காட்டியுள்ளது: “முன்பு நாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சீனா கொடுப்பதை ஏற்க வேண்டி இருந்தது. பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டால், மியன்மரில் உள்ள அனைவருக்கும் சிறப்பு ஏற்படும்.”
“நேபிடாவை மிக வலுவாக சீனா தழுவுகின்றது” என்ற தலைப்பில் ஆசியா டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஆட்சிக்குழு 2004 ல் நடந்த அதிகாரப் போராட்டத்திற்கு மீண்டும் செல்லும் போக்கை விவரிக்கிறது; அப்பொழுது பிரதம மந்திரி கின் ந்யுன்ட் “சீனாவின் மனிதன்” என்று கருதப்பட்டவர் ஊழல் குற்றங்களை ஒட்டி அகற்றப்பட்டார். இது 2009 இல் பர்மிய இராணுவம் சீனக் குடிமக்களை வடக்கு பர்மாவிற்குள் நடத்திய முறை பற்றிய சீனாவின் கோபத்தைச் சுட்டிக் காட்டுகிறது; அதேபோல் ஒரு முக்கிய சீன நிதி அளித்தல் மூலம் வரவிருந்த அணைத்திட்டம் ஒத்திவைக்கப்பட்ட முடிவு பற்றியும் கூறுகிறது.
இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும்கூட, பர்மிய ஆட்சி பெய்ஜிங்கிடம் நட்பாகத்தான் இருக்க விரும்புகிறது. திங்களன்று கிளின்டன் வருகைக்கு முன்னதாக, நாட்டின் உயர்மட்டத் தளபதி மின் ஆங் ஹ்லைங் பெய்ஜிங்கிற்குச் சென்று உயர்மட்ட சீன அரசியல், இராணுவத் தலைவர்களுக்குத் தங்கள் நாட்டு இராணுவ ஆட்சிக்குழுவின் தொடர்ந்த ஒத்துழைப்பு குறித்து உறுதியளித்தார். பெய்ஜிங் மியன்மரில் கணிசமாக இருப்புக்களை முதலீடு செய்துள்ளது, பொருளாதார, மூலோபாய உறவுகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்டுள்ளது; அவை சீனாவிற்குத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நேரடியாக அணுகும் பாதை ஆகியவற்றை அளிக்கின்றன.
பர்மாவில் இருந்து தென்சீனாவிற்குச் செல்லும் எரிசக்தி குழாய்த்திட்டத்தை சீன ஆரம்பித்துள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணை மலாக்கா ஜலசந்தியின் மூலம்தான் வரவேண்டும் என்பதைக் குறைக்கும் பெய்ஜிங் முயற்சிகளில் ஒரு பகுதியாகும் இந்த மூலோபாயம் பென்டனின் திட்டமான மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய “நெரிக்கும் புள்ளிகளை” -“choke points”- கட்டுப்படுத்தி, அதையொட்டி சீனா மீது கடற்படை முற்றுகை நடத்தக்கூடிய திறனை எதிர்க்கும் நோக்கத்தில் உள்ளது.
சீனாவின் மத்தியத் தொலைக்காட்சியில் பேசிய உயர்கல்வியாளர் காவோ ஜுகி, பெய்ஜிங்கின் அச்சங்களை எடுத்துக்காட்டிய வகையில், “அமெரிக்கா கீழ் மெகோங் நாடுகளான மியன்மர், கம்போடியா, லாவோஸ் ஆகியவற்றுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. நாம் இந்த நோக்கம் வலுவாக உள்ளது என்பதைக் காணமுடியும், இது சீனாவை இலக்குக் கொள்ளுவதற்கு என்பது மிகத் தெளிவு” என்றார்.
பர்மிய ஜனாதிபதியின் ஆலோசகர் நே ஜின் லாட்டும் மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்கட்டி, அவை அமெரிக்காவுடன் உறவுகளை முன்னேற்றுவதற்கு மற்றொரு உந்துதல் என்றார். “நாம் ஒன்றும் இங்கு அரபு வசந்தத்தை விரும்பவில்லை” என்றார் அவர். பரந்த அளவில் அரசாங்க எதிர்ப்புக்களைப் பற்றி மட்டும் ஆட்சி கவலைப்படவில்லை; கடந்த காலத்தில் அது அவற்றை இரக்கமின்றி நசுக்கியுள்ளது; ஆனால் லிபியாவில் இருந்த சமூக அமைதியின்மையை அமெரிக்கா பயன்படுத்தி அமெரிக்கச் சார்புபான ஆட்சியை நிறுவியது குறித்துக் கவலைப் படுகிறது.
கிளின்டன் பர்மாவிற்கு பல கோரிக்கைகள் அடங்கிய பட்டியலுடன் வந்தார். இதில் சூ கியி தலைமையில் உள்ள முதலாளித்துவ எதிர்த்தரப்பினருக்கு கூடுதல் சுதந்திரம் அடங்கியிருந்தது. இதைத்தவிர நாட்டின் இனவழிச் சிறுபான்மையினரிடையே உள்ள நீடித்த மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், சர்வதேச அணுசக்தி அமைப்பு நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட அணுச்சக்தித் திட்டத்தை ஆய்வு செய்யவேண்டும் ஆகியவையும் இருந்தன.
இதற்கு ஈடாக கிளின்டன் அதிகம் கொடுக்கவில்லை. : “சீர்திருத்தங்களில் நல்ல வேகம் இருந்தால், நாங்கள் இன்னும் கொடுக்கத் தயார். ஆனால் வரலாறு எங்களை எச்சரிக்கையுடன் இருக்குமோறு கற்பித்துள்ளது.” என்றார் அவர். “பொருளாதாரத் தடைகளை” நீக்குவது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். அதேபோல் பர்மாவுடன் முழு இராஜதந்திர உறவுகளையும் நிறுவ அமெரிக்கா திட்டத்தை முன்வைக்கவில்லை. சர்வதேச நிதிய அமைப்புக்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை நிதியளிப்பதை அமெரிக்க இனித் தடுப்பிற்கு உட்படாது, ஐ.நா. சுகாதாரப் பாதுகாப்பு, சிறு வணிகங்கள் ஆகியவற்றிற்குக் கொடுக்கும் வளர்ச்சி நிதியம் விரிவாக்கப்படுவதற்கு ஆதரவு கொடுக்கும் என்று மட்டுமே கிளின்டன் குறிப்பைக் காட்டியுள்ளார்.
Lower Mekong முயற்சியில் சேருமாறு கிளின்டன் பர்மாவிற்கு அழைப்பு கொடுத்தது குறிப்பிடத் தக்கது ஆகும்; இது பெய்ஜிங்குடன் உறவுகளை இன்னும் தளர்த்த ஒரு வழிவகை ஆகும். இக்குழு 2009ல் வாஷிங்டனால் தோற்றுவிக்கப்பட்டது பிராந்தியத்தில் கூடுதலான செல்வாக்கைச் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தை உடையது. இதில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகியவை உள்ளன. இப்பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது வேண்டுமென்றே செய்யப்பட்டது—“கீழ்” மெகோக் பகுதி என்பது “மேல் மெகோங்” என்று சீனப்பகுதிக்குள் இருக்கும் நிலப்பகுதியை விலத்திவைக்கும். மெகோங் ஆற்றில் சீன அணைத்திட்டங்களின் பாதிப்பு உட்பட சீனா குறித்த புகார்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பர்மா ஆகியவை இரண்டாம் உலகப் போரின்போது இறந்த 600 படையினரின் எஞ்சிய சடலப் பகுதிகளை மீட்பதிலும் ஒத்துழைக்கலாம் என்று கிளின்டன் கூறினார். இத்திட்டம் வியட்நாமில் கூட்டு அமெரிக்க நடவடிக்கைகளைப் போன்றதே ஆகும். அதில் காணாமற்போன அமெரிக்க படையினரை கண்டுபிடத்தல் நோக்கமாக இருந்தது. இது பர்மிய, அமெரிக்க இராணுவத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை நிறுவ வசதியான போலிக்காரணத்தை அளிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சூ கியியை கிளின்டன் வியாழன் மற்றும் வெள்ளி என இரு நாட்களில் இருமுறை சந்தித்தர். அமெரிக்க நலன்களுடன் இன்னும் கூடுதாக பிணைந்திருக்கும் ஆட்சியை அமைப்பதில் தீவிரமாக உள்ள பர்மிய எதிர்த்தரப்புடன் ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. கிளின்டன் வருகை அறிவிக்கப்படுவதற்கு முன்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு சூ கியி உடன் பாலியில் இருந்து ஒபாமா தொலைபேசியில் உரையாடினார்.
சூ கியி அமெரிக்க மூலோபாயத்தை முழுமையாக ஒப்புக் கொண்டார்; இது பர்மிய எதிர்த்தரப்பு சாதாரணத் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் குறித்த கவலைகளினால் உந்துதல் பெறவில்லை என்பதை மீணடும் நிரூபிக்கிறது. மாறாக சூ கியி பல தசாப்தங்கள் இராணுவ ஆட்சியினால் ஓரங்கட்டப்பட்டுள்ள பர்மிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளைத்தான் பிரதிபலிக்கிறார். அப்பிரிவுகள் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகள் மற்றும் நாட்டை வெளி முதலீட்டிற்காகத் திறந்துவிடுதல் ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுக்கின்றன.
கடந்த ஆண்டு இராணுவ ஆட்சிக்குழுவின் போலித் தேர்தல்களைப் புறக்கணித்த பின், சூ கியி இப்பொழுது தானும் தேசிய ஜனநாயகத்திற்கான குழுவும், தேர்தல்களின் ஜனநாயக விரோதப் போக்கு இருந்தாலும், இடைத்தேர்தல்களில் தேசிய ஜனநாயகத்திற்கான குழு வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக இப்பொழுது குறிப்புக் காட்டியுள்ளார். வெளியுறவுக்குழுவுடன் நடத்திய வீடியோ பேட்டி ஒன்றில், முன்னாள் தளபதியும் நீண்டகாலமாக இராணுவ ஆட்சி அதிகாரத்துவத்தின் உறுப்பினருமான ஜனாதிபதி தீன் சீனைத் தான் நம்புவதாகவும் சூ கியி தெரிவித்தார்.
இராணுவ ஆட்சியுடன் உடன்பாடு காண அமெரிக்க உதவியைப் பெற முடியும் என்று சூ கியி நம்புகிறார்; இது தேசிய ஜனநாயகத்திற்கான குழுவிற்கு கூடுதல் அரசியல் செல்வாக்கை அளித்து, எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வணிகத் தட்டுக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புக்களையும் கொடுக்கும். இராணுவ ஆட்சிக்குழுவைப் போலவே சூ கியிவும் பர்மாவில் ஒரு “அரபு வசந்தம்” கூடாது என்பது குறித்துக் கவலையை வெளிப்படுத்தினார்—அதாவது தொழிலாளர் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் வெகுஜ எதிர்ப்புக்களில் ஈடுபடக்கூடாது என்பதை.
“மியன்மாரை அடுத்த எல்லைப்பிரதேசமாக நிறுவனங்கள் காண்கின்றன” என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்று பர்மியப் பொருளாதாரம் திறக்கப்படுவதால் பெருநிறுவனங்கள் எதிர்பார்க்கும் நலன்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. வணிகத் தூதுகுழுக்கள் ஏற்கனவே பர்மாவின் சந்தைகள் திறனைப் பயன்படுத்த, எரிவாயு, எண்ணெய் உட்பட, அதன் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் தீவிர நோக்கத்தில் பர்மாவிற்கு வருகின்றன. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு அரங்கு, “மிகக் குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொடுக்கும் ஊதியங்கள்” என்ற முறையில் பர்மாவின் நலன்களையும் கட்டுரை குறிப்பிடுகிறது; இதைத்தவிர ஆங்கிலம் பேசும் அறிவுஜீவி வர்க்கமும் பிரிட்டிஷ் பொதுச்சட்டத்தில் வேர்களைக் கொண்டுள்ள சட்ட முறையும் உள்ளது என்றும் கட்டுரை குறிப்பிடுகிறது.
பொருளாதார தேவைகள் தெளிவான ஒரு உந்துதல் என்றாலும், ஒபாமா நிர்வாகம் இப்பிராந்தியம் முழுவதும் சீன எதிர்ப்புக் கூட்டுக்களை வளர்க்க முற்படுகையில், அதன் முக்கிய நோக்கம் பர்மாவுடனான சீன உறவுகளைக் குழிபறிப்பதாகவே உள்ளது.
No comments:
Post a Comment