மத்திய கிழக்கு கிளர்சியின் எதிரொலி.. குவைத் அரசாங்கமும் பதவி விலகியது!
குவைத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக எதிர்கட்சியினருடன் தொடர்ந்து இருந்து வரும் கருத்து வேறுபாடுகளை அடுத்து பிரதம மந்திரி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவென 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவ்ககப்பட்டதை அடுத்து பிரதம மந்திரி ஷேய்க் நாஸர் அல் முஹம்மட் அல் ஷபா பதவி விலகும்படி தீவிர வற்புறுத்தலுக்கு உட்பட்டிருந்தார்.
பிரதம மந்திரி பதவி விலக வேண்டுமென்று கோரி எதிர்கட்சியினரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த வார முற்பகுதியில் பாராளுமன்ற கட்டடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். புதியதொரு அரசாங்கம் பதவியேற்கும் வரை Nஷய்க் நாஸர் தொடர்ந்தும் பதவி வகிப்பார்.
அரச தொலைக்கட்சி அதன் செய்தி ஒளிபரப்பில் குவைத் மன்னர் பிரதம மந்திரியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவித்தது. ஏனைய அரபு நாடுகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை குவைத் ஓரளவு தவிர்;த்து வந்துள்ளபோதிலும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தமாக அதன் மீதான நெருக்கடி அதிகரித்திருந்தது. பாராளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்திய நூற்றுக்கணக்கானோர் சென்ற 16ஆம் திகதி பாராளுமன்ற சபா மண்டபத்தினுள்ளேயும் பிரவேசித்திருந்தனர்;.
0 comments :
Post a Comment