சட்டவிரோதமாக யூரோ நாணயங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட நபர் கைது.
சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த ஒரு தொகை யூரோ நாணயங்கள் கட்டுநாயக்கவில் வைத்து கைப்பற்றப்பட்டன. இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி செல்ல வருகை தந்த பயணியொருவரிடமிருந்து இந்த நாணங்கள் கைப்பற்றபபட்டன.
இதன் பெறுமதி 50 இலட்சம் ரூபாவாகும் என, விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் இலங்கையைச் சேர்ந்தவராவார். இலங்கை சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம் பொரலெஸ்கமுவ பகுதியிலிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பொரலெஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டது. ஹெரோயின் போதைப்பொருள், முச்சக்கர வண்டியொன்றில் கல்கிசை பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கும் போது, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
இதன் பெறுமதி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவென, பொரலெஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியுடன் இரண்டு சந்தேக நபர்களும், கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விநியோகத்திற்கென பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்லிட தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ.எம். கருணாரட்னவின் ஆலோசனைக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டது.
0 comments :
Post a Comment