அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை அரசாங்கம் முதலில் சரி செய்யவேண்டும் - சஜித்
காய்கறி வகைகளை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதன் காரணமாக 35 சதவீமாவை வீணாவதாக அரசாங்கம் கூறுகிறது. அரச நிறுவனங்களில் எந்தளவு வீண்விரயங்கள் இடம்பெறுகின்றன.அவைகளை முதலில் அரசாங்கம் சரிசெய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
மரக்கறி மற்றும் பழங்களை பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்களை இன்று நேரில் சென்று சந்தித்த போதே அவர் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை சரிசெய்வதை விடுத்து அரசாங்கம் விவசாயிகளின் பணத்தை சுரண்ட ஆரம்பித்துள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முனையும் அடிமட்ட விவசாயிகளை அரசாங்கம் குறி வைக்கிறதே தவிற உயர்மட்டத்தில் ஊழல் செய்பவர்களை கண்டும் காணாமல் இருப்பது போல் நடந்து கொள்கிறது.
முறையாக ஒரு திட்டத்தை ஒரு அரசு நடைமுறைப்படுத்துமானால் அது எந்த அரசாக இருந்தாலும் மக்கள் ஆதரவு வழங்குவர். ஆனால் தற்போதைய அரசு தலைகளில் துப்பாக்கியை வைத்தே தமது திட்டங்களை நிறைவேற்றுகிறது என்றார்.
0 comments :
Post a Comment