நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்குகளை மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு, துரிதமாக விசாரித்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், நீதியமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த வரவு செலவுத்திட்டத்தின் பின்னர், நாம் இந்த வழக்குகளை துரிதமாக விசாரிப்பது தொடர்பாக, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். சட்ட மறுசீரமைப்பின்போது, சிவில் வழக்குகள் தொடர்பான விதிமுறைகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில், இதனை முன்னெடுப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்கின்றோம். நியாயத்தை நிலைநாட்டுவது தொடர்பான பல்வேறு மாற்றங்கள், இதனூடாக ஏற்படும்.
இணக்க சபை முறை மற்றும் பிணக்குகளை தீர்ப்பது தொடர்பாகவும் எமது கவனத்தை செலுத்தி, சர்வதேச பிணக்குகளை தீர்க்கும் நிலையமொன்றை கொழும்பில் ஆரம்பிப்பதற்கும், தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment