வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் நிலைகொண்டுள்ள தேன் சூறாவளி தாக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதிலிருந்து தொடர்ந்து தவிர்ந்து கொள்ளூறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சூறாவளி காரணமாக, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக, திருகோணமலை வரை கரையோரம் மற்றும் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும். கடலில் எக்காரணம் கொண்டும் பயணம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, மீனவர்கள் வேண்டப்பட்டுள்ளனர்.
நாட்டைச்சூழவுள்ள கடலில், வடமேற்கு மற்றும் மேற்கு திசையூடாக மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். வடக்கு ஆழ்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாமென்றும், வடக்கின் கரையோரத்திலும், வடகிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடலிலும் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்களுக்கு வரையறுக்காமல், எந்தவொரு அனர்த்த நிகழ்வின்போதும், மக்களுக்கு சேவையாற்ற தயாராகவிருக்க வேண்டுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளை பணித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற வைபவமொன்றில், கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.
ஆங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த கால அனர்த்தங்களின்போது, பாதுகாப்பு படையினர் ஆற்றிய பணியை, அமைச்சர் பாராட்டினார்.
கடந்த கால வெள்ளத்தின்போது, எமது ராணுவத்தினர் ஒரு நேரம், பட்டினி கிடந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமது உணவு பொதிகளை அன்பளிப்பு செய்துள்ளனர். விமானங்கள் மற்றும் கடற்படை படகுகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மக்களை மீட்டெடுக்கும் பணிகளில், பொலிஸாருடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் துரித நடவடிக்கை எடுத்தனர். இதனால் எமக்கு வெற்றிகரமான முடிவுகளை பெற முடிந்தது.
No comments:
Post a Comment