Wednesday, December 21, 2011

யாழ்.தீவு பகுதி மக்களுக்கு, கடற்படையினரால் பாதுகாப்பான போக்குவரத்து சேவைகள்!

யாழ்.மாவட்டத்தில் உள்ள இந்த தீவுகள் அன்று பயங்கரவாதம் காரணமாக, வெறிச்சோடிக்காணப்பட்டது. இன்று அந்த தீவுகளில் மக்கள் அச்சமின்றி நடமாடுகின்றனர். இத்தீவுகளில் வாழும் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ள ஒரேயொரு போக்குவரத்து வசதி படகு சேவையாகும். இதுவொரு இக்கட்டான பயணமாக இருந்தாலும் தீவு வாசிகள், தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கும், சுற்றுலாப் பயணிகள், தீவின் ரம்மியமான இடங்களை பார்வையிடுவதற்கும் படகு சேவைகள் இன்றியமையாது தேவைப்படுகின்றன.

இதன் பயங்கர நிலைமையை தடுக்கும் வகையில், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க, கடற்படை முன்வந்திருப்பது, பாராட்டத்தக்கதாகும். நயினா தீவு, நெடுந்தீவு, அனல்தீவு, குறிகட்டுவான் ஆகிய இடங்களுக்கு கடற்படை விசேட படகு சேவைகளை நடாத்துகின்றது. நயினா தீவில் வழிபாடுகளுக்கு செல்லும் பக்தர்களுக்கென கடற்படை 60 படகுகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த படகுகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்கென, விசேட கடற்படை படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் ரேடார் தொகுதி மூலம் அந்த சேவைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன



.

No comments:

Post a Comment