Friday, December 16, 2011

தொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானம்

கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அங்கு 90 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் தொழுகைகான அழைப்பு (பாங்கு ) விடுக்கப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக தீர்மானிக்க நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய நூற்றுகணக்கான வர்த்தகர்கள் ஏகோபித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக வர்த்தக நிலையங்கள் மூடப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு, குறிப்பாக முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் ஒழுங்குகள் தொடர்பாக அக்குரணை ஜம்இயதுல் உலமா வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தற்போது அக்குரணையில் தொழுகைக்கான அழைப்பு செய்யப்பட்டபோது அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடுவதை காணக் கூடியதாக உள்ளது.

செய்தி- அஸ்லம் அலி

No comments:

Post a Comment