எழுச்சி இல்லாத "எழுச்சி நாள்". மு.சிவானந்தன்
கனடாவில் கடந்த 27 ஆம் திகதி நடந்த "நினைவெழுச்சி நாள்" படு சோகமாக எழுச்சி எதுவும் இல்லாமல் முடிந்துள்ளது. காலை 6 .30 மணிக்கு முதல் நிகழ்வு, மதியம் 12 .௦௦ 00 மணிக்கு இரண்டாவது நிகழ்வு, மூன்று மணிக்கு மூன்றாவது நிகழ்வு, மாலை ஆறு மணிக்கு நான்காவது நிகழ்வு என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த நிகழ்வுகள் மாலை மூன்று மணி வரை ஆட்கள் வராதபடியால் நடத்தப்படவில்லை. ஆயினும் அவர்களது தொலைக் காட்சியிலும், ரேடியோவிலும் "திரண்டு வாருங்கள்” என்ற அழைப்பு மாலை ஏழு மணி வரை தொடர்ந்தது.
மூன்று மணிக்குப் பின்னரே நிகழ்வுகள் பற்றி தொலைக் காட்சியில் காண முடிந்தது. அதுவும் முழுதாக அல்ல. ஐந்து நிமிடம் மட்டும் கார்த்திகைப் பூ கொடுக்கும் சம்பவங்கள் காண்பிக்கப்பட்டன. இந்தக் கார்த்திகைப் பூக்கள் இலங்கையில் இருந்து வரவழைக்கப்படதாக கூறப்பட்டது.
"ஒற்றுமையாகி" நடத்துகிறோம் என்று தமிழர்களின் காதில் பூ வைத்தவர்கள் மற்றைய கோஷ்டியின் தொலைக் காட்சியினரை மாலை ஏழு மணி வரை அனுமதிக்கவில்லை. ஆட்களில்லாத கதிரைகளைக் காட்டி மானத்தை வாங்கிவிடுவார்கள் என்ற பயம் காரணமாக இருக்கலாம்.
மழை தொடர்ந்து பெய்தபடியால் வந்த பலர் கொட்டகையினுள் முடங்கி இருந்து நெளிந்தார்கள். இராஜபக்ஷவும் டக்ளசும் "வருண பகவானுக்கு" என்னமோ கொடுத்து மழை வரப் பண்ணியிருக்கிறார்கள் என்று இனி ஒரு கதை பரப்ப சான்ஸ் இருக்கிறது. வருண பகவானையும் "அரசின் கைக் கூலி" , "ஒட்டுக் குழு" என்று புலம்பாமல் இருந்தால் நல்லதுதான். நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சாட்டு என்பார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகியுள்ளது.
மாவீரர் குடும்பங்கள் வந்து தங்களிடம் "பதிவு' செய்யுங்கள் என்று வேறு அறிவித்திருந்தனர். இவர்கள்தானே பெரும் "புலிகள்" என்று ஜம்பம் அடிக்கிறார்கள். இறந்து போன புலிகளின் விபரங்கள் இவர்களிடம் எப்படி இல்லாமல் போனது? கனடாவில் உள்ளவர்களிடம் விபரங்களை அறிந்து "பரணி" பாடவா அல்லது பொலிசாருக்கு அறிவிக்கவா என்பது இன்னமும் தெரியவில்லை. புலிகளின் பிரமுகராக வலம் வந்த நேரு குணா திடீரென்று தனக்கும் புலிக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டதை நினைத்தால் கண்டிப்பாக இந்த சந்தேகங்கள் வரவே செய்யும்.
இந்த நிகழ்வுக்குப் பலர் தலை காட்டவில்லை. ஒரு "வெள்ளையர்களும்" காணப்படவில்லை. அதில் முக்கியமான நபர் சின்னத்துரை திருச்செல்வம் என்பதும் அவரை "பிரதமர்" என்று அறிவித்த கடல் கடந்த ஜனநாயக தமிழீழம் என்ற அமைப்பினர்தான் இந்த நிகழ்வை நடத்தினார்கள் என்பது இன்னொரு விசேஷம்.
கனடாவில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு "பொறுப்பாளர்" என்று நியமித்து "வசூல்" செய்தவர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் எண்ணிக்கையே இரண்டாயிரத்துக்கும் அதிகம். அவர்களில் பலரினது தலைகளைக் காணாது போனது வியப்பான விஷயம். சில்லறை கிடைக்காத எதுக்கும் தமிழன் "மினக் கெடமாட்டான்" என்பது தெரிகின்றது.
"ஒற்றுமை" யாக நடத்துகிறோம் என்று போஸ்டர்களைக் கிழித்தார்கள். மற்றைய கோஷ்டியினர் எவரும் இந்த கூத்துக்கு வரவில்லை. சில்லறை சேராது என்ற பயம் காரணமாக இருக்கலாம்.
புலிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டவர்களுக்கும் நவம்பர் 27
க்கும் என்ன சம்பந்தம். தமிழர் வரலாற்றில் புலிகளைத் தவிர கார்த்திகைப் பூவையும், நவம்பர் 27 ஐயும் சம்பந்தப்படுத்தியவர்கள் வேறு யாருமில்லை. கனடிய சட்டத்துறை ஏதாவது "கடுக்காய்" கொடுத்துவிட்டதோ என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள்.
0 comments :
Post a Comment