Wednesday, December 21, 2011

ஆஸி.யில் பிரமாத வரவேற்பு திருடர் பற்றி துப்பு கொடுக்கும் ‘ஹூ-டியூப்’ இணையதளம்

வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை ஒரு ரகம் என்றால், கடைகள், ஷாப்பிங் மால்களில் யாருக்கும் தெரியாமல் நைசாக பொருட்களை லவட்டுவது இன்னொரு ரகம். பெரிய ஆள் தோரணையில் இருப்பவர்கள்கூட இதுபோல கேவல திருட்டில் ஈடுபடுவார்கள் என்பதால் கண்டுபிடிப்பது கடினம். இதுபோன்ற ‘டீசன்ட்’ கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவியாக ஆஸ்திரேலிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ‘ஹூ-டியூப்’ என்ற பெயரில் இணையதளம் தொடங்கியிருக்கிறார்கள்.

கடைகள், வர்த்தக நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருட்டு தொடர்பாக பதிவாகும் காட்சிகளை இந்த இணையதளத்தில் அப்லோடு செய்யலாம். திருடன் பற்றி தகவல்கள் தெரிந்தால் அதையும் பதிவு செய்து வைக்கலாம். இணையதளத்தை பார்க்கும் மற்ற கடைக்காரர்கள் உஷாராவதற்காக இந்த வசதி. இணையதளம் ஆரம்பித்து 3 மாதத்தில் மொத்தம் 127 காட்சிகளை பல பகுதிகளை சேர்ந்த கடைக்காரர்களும் அப்லோடு செய்திருக்கிறார்கள். இதன் உதவியுடன் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment