பிரிட்டிஸ் த இன்டிபென்டனுக்கு முன்னாள் புலி உறுப்பினர் ஒப்புதல் வாக்குமூலம்.
வடக்கு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் எல்ரிரிஈ சிறுவர்களை பலாத்காரமாக படையில் இணைத்துக் கொண்டதாக த இன்டிபென்டன் தெரிவிக்கின்றது. த இன்டிபென்டன் எனும் பிரிட்டிஸ் பத்திரிகையொன்றில் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு புலிகள் பலாத்காரமாக இணைத்துக் கொண்ட சிலருக்கு ஒருநாள் ஆரம்ப பயிற்சியை மாத்திரம் வழங்கியதன் பின்னர் போர் முனைக்கு அனுப்பியுள்ளனர்.
அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு தப்பி வர முயற்சித்த ஏராளமான பொது மக்களை புலிகள் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் கடுமையாக இடம்பெறும் போது 14 வயதிற்கும் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்ககைள் தீவிரமடைந்துள்ளன.
அத்துடன் சமரில் ஈடுபடும் புலிகளை பாதுகாக்கும் வகையில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கேடயமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தனது பிள்ளையை கூட புலிகள் பலாத்காரமாக இணைத்துக் கொண்ட போதிலும் பின்னர் அவரை அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்ப தான் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிப்பயங்கரவாதிகள் போர்குற்றங்களை புரிந்ததா? என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் போர் குற்றங்கள் புலிகளினால் பாரிய அளவில் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது மக்களும் இதனை அறிந்துவைத்திருந்தனர். எனினும் மக்கள் தப்பிச் செல்ல முயற்சித்த போது அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இந்த முன்னாள் புலி முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment