ஜனவரி முதல் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - ஐ.தே.க.
அரசியல் கைதியாக உள்ள சரத் பொன்சேகாவின் விவகாரம், பறிமுதல் சட்ட மூலம், வரவு செலவுத் திட்டம் என்பவற்றை எதிர்த்து தொடர்ந்தும் போராட்டங்கள் அடுத்த மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் அடக்கு முறைகள் உள்ளிட்ட ஜனநாயக விரோத ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஹைப் பாக் மைதானத்தில் நடைபெற்ற அரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளித்துள்ளது. இப் போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களாலும் பங்களிப்புகள் வழங்கப்பட்டது.
பொது மக்களுக்கு எந்த வகையிலும் நிவாரணங்களை வழங்காது அரசாங்கம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் நாட்டின் வளம் சீரழிந்துள்ளது. எனவே வெற்றியிலக்கை அடையும் வரை போராடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment