பதிவு செய்யப்படாத தொலைபேசி நிலையங்கள் மீது நடவடிக்கை
பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி நிலையங்கள் தொடர்பாக, பூரண விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இயங்கி வரும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில், 40 வீதமானவை அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாதவையென, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவின் சட்டமூலத்தின் பிரகாரம், அனைத்து கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களும், ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டும். இதனால், தற்போது பதிவு செய்யப்படாமல் இயங்கும் தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போது இலங்கையில் ஒரு கோடியே 82 லட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment