Thursday, December 1, 2011

இன்னும் ஒரு முறை இந்தியாவை பாகிஸ்தான் தாக்கினால்... அமெரிக்கா எச்சரிக்கை

இன்னொரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த தீவிரவாத அமைப்பாவது இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஓய்வு பெற்ற ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியதாவது,

இன்னொரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த யாராவது இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அந்நாடு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் அமெரிக்க உயர் அதிகாரிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர்.

நானும், எனக்கு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்தவர்களும், அமெரிக்க அரசும் பல முறை பாகிஸ்தானை எச்சரித்தாகிவிட்டது. ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்வதாகவே இல்லை. இன்னும் ஒரு முறை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இனியும் பொறுமையாக இருக்க மாட்டார்.

பாகிஸ்தான் மட்டும் தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பதை நிறுத்தினால் அந்நாட்டிற்குத் தேவையான உதவிகளை செய்ய உலகத் தலைவர்கள் தயாராக உள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகும் பிரதமர் மன்மோகன் சிங் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதை பாராட்டுகிறேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com