ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களை தகர்க்க ஈரான் சதித்திட்டம்
ஜெர்மனி நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதை புலனாய்வு துறையினர் கண்டறிந்துள்ளனர். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள ஈரானின் தூதுவர் அலுவலகத்துடன் தொடர்பு வைத்துள்ள ஜெர்மன் தொழிலதிபர் ஒருவரும், இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூட்டமைப்பின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இக்காவல்துறையின் தலைவரான ஜோர்க் ஸீயர்க்கெ, இந்தச் சதித் திட்டத்தால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றார்.
கடந்த சில நாட்களாக ஈரானுக்கும்,மேலை நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரான் ஆணு ஆயுதத் தயாரிப்பில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணு சக்தி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரக அதிகாரிகளை ஜெர்மனி தனது தாய்நாட்டிற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தது.
பிரிட்டனின் தூதரகத்தை ஈரானிய மாணவர்கள் தாக்கியதால் ஜெர்மனி தன் தூதரக அதிகாரிகளுக்கு இவ்வழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment