Tuesday, December 13, 2011

ஒரு பெயிட் இரத்தத்தை கொடுத்து பால்மா வாங்கினேன்- வன்னியிலிருந்து மோகன்

“தமிழர்களை காப்பாற்றவே போராடினோம் எனக்கூறுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களே இவர்களை குறைகூறி வெறுக்கும் அளவிற்கு இவர்கள் என்ன தான் செய்தார்கள்?” உண்மையில் இது நியாயமான கேள்விதான். ஆனால் இக் கேள்வியை மாற்றி “தமிழ் மக்களே இவர்களை குறைகூறி வெறுக்கும் அளவிற்கு இவர்கள் என்னதான் செய்யவில்லை?” எனக் கேட்பது பொருத்தமானது என நினைக்கின்றேன்.

இதற்கான பதிலை விடுதலைப்புலிகளினால் பல இன்னல்களை அனுபவித்த, வன்னிப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட லக்ஷ்மனான் மோகனின் கதையில் இருந்து பெற முடியும் என நம்புகின்றேன்.

லக்ஷமனான் மோகன், பயங்கரவாதிகளால் தான் அனுபவித்த இன்னல்களை கண்களில் இருந்து கண்ணீர் மல்க கூறுகின்றார். மூன்று பிள்ளைகளின் தந்தையான மோகன், இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தன்னையும், தனது மனைவி பிள்ளைகளை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற எதிர்கொண்ட இன்னல்கனை கூறும்போது எமது கண்களிலும் கண்ணீர்வடிந்தன.

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கையிலும் கூட அரசாங்கம் எமக்கு அனைத்து உணவுப் பொருட்களையும் அனுப்பியது. நாம் அப் பொருட்களை எமது இரு கண்களாளும் கண்டோம். அவை அனைத்தும் எமக்கு அரசாங்கத்தால் அனுபப்பட்டவை, ஆனால் அப் பயங்கரவாதிகள் அவை அனைத்தையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். அவர்களது சங்கங்கள் மூலமே விநியோகித்தனர். சாதாரண விலையைவிட பல மடங்கு பணம் செலுத்தியே அவர்களிடம் எமக்கு தேவையான பொருட்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

போர் உக்கிரமடைந்து அரசப்படையினர் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நெருங்கிய காலகட்டத்தில் பயங்கரவாதிகள் தம்மைகாப்பாற்றிக் கொள்ள எம்மை பயணக்கைதிகளாக பயன்படுத்தினர். எமக்கு உண்பதற்கு ஒழுங்கான உணவு இல்லை. ஆனால் அரசாங்கத்தால் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகள் அவற்றை தமது தேவைக்காக பதுக்கிவைத்தனர். அதன்பின்னர் இவர்கள் பணம்கொடுத்தும் கூட எமக்கு தேவையான அடிப்படைபொருட்களை தரவில்லை. நாம் உணவு இன்றி சிறிது பலவீனமடைந்து இருந்தோம். அச் சமயம் எனது கடைசி பிள்ளைக்கு கட்டாயமாக பால்மா வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வது என தெரியவில்லை. அவர்களிடம் போய் கேட்டேன், அவர்கள் கூறினார்கள். “உனது ஒரு பையின்ட் இரத்ததை தந்தால் மாத்திரமே உனக்கு பால்மா பைக்கட் தர முடியும்” எனக் கூறினார்கள். நானும் பலவீனமடைந்திருந்தேன் எனக்கு வேறு வழிதெரியவில்லை. எனது பிள்ளையின் உயிரை காப்பாற்ற எனது ஒரு பையின்ட் இரத்ததை கொடுத்தே பால்மா பைக்கட் வாங்கினேன். ஆனால் அவர்கள் பல்லாயிரக்கணக்கான பால்மாக்களை பதுக்கிவைத்தினருந்தனர். இது உண்மை, இதற்கு எனது மனைவியும் பிள்ளைகளும் சாட்சி என தனக்கு பயங்கரவாதிகளால் இழைத்த கொடுமைகளை கண்ணீர் மல்க மோகன் கூறினார்.

போர் மிகவும் உக்கிரமடைந்துவிட்டது, பயங்கரவாதிகள் தம்மை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் பணயக் கைதிகளாக எம்மை வைத்திருந்தார்கள். யுத்த சூனியப் பிரதேசத்திற்குச் சென்று எம்மை காப்பாற்றிக் கொள்வோம் என முயற்சித்தோம். அதையும் அவர்கள் விடவில்லை. யுத்த சூனியப் பிரதேசத்திற்கு வந்து அங்கிருந்த படி இலங்கை இராணுவத்தை தாக்கினர். எமக்கு எங்கும் செல்ல முடியாத நிலையில் இருந்தபடி, பங்கர்களை அமைத்து அதில் இருக்க முயற்சித்தோம். அதையும் அப் பயங்கராவாதிகள் விடவில்லை, எமது பங்கருக்கு இடையில் வந்து அவர்களும் ஒழிந்துக்கொண்டனர். வேறு வழியின்றி, என்ன நடந்தாலும் பரவாயில்லை என, அனைத்து மக்களும் இராணுவக்கட்டுப்பாடுப் பிரதேசத்திற்கு செல்ல ஆரம்பித்தனர்.

இதை அவர்கள் முற்றாக எதிர்த்தனர். பெரிய அணையொன்றை கட்டி எம்மை மறித்தனர். சிலர் அவர்களை எதிர்த்து போக முட்பட்ட வேளையில் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் ஒரு அடி எடுத்து வைத்தால் அனைவரையும் சுடுவோம் எனக்கூறினர்.

அவ்வேளையில் இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். மக்கள் அனைவரையும் தங்களது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமபடியும், இன்னும் சில நாட்களில் எங்கள் அனைவரையும் அவர்கள் மீட்பார்கள் எனவும் கூறினர்.

இவை அனைத்தையும் விட ஒரு பெரிய கொடுமையை எனது கண்களால் கண்டேன். இப் பயங்கரவாதிகள் அவர்களது உறுப்பினர்களுக்கு செய்த கொடுமை அது. நாம் இடம்பெயர்து வௌ்ளமுல்லிவாய்கால்களுக்கு அருகே வருகையில் அவ்விடத்தில் ஒரு பஸ்வண்டி நிறைய விடுதபை்புலிகளின் காயப்பட்ட உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் கைகளை இழந்து, சிலர் கால்களை இழந்து, சிலர் உடல்முழுவதுமாக காயமடைந்து போன்ற பல உறுப்பினர்கள் அதில் இருந்தார்கள். தமது அமைப்புக்காக போராடிய உறுப்பினர்களையே காப்பாற்ற வழிதெரியாத இப் பயங்கரவாதிகள், அவர்கள் அனைவரையும் அப் பஸ்ஸில் குண்டுவைத்து தகர்தனர். இதற்கு பலர் சாட்சி. இதை நானும் நேடியாக கண்டேன். பின்னர் இவர்களே மேற்கொண்ட இச் சம்பத்தை இராணுவத்தினர் மேற்காண்டதாக திரிவுப்படுத்தி வெளியுலகத்திற்கு செய்தி பரப்பினர்.

உயிர் போனாலும் பரவாயில்லை என மே 16ஆம் திகதி இரவு நான் எனது மனைவி பிள்ளைகளையும், எனது பெற்றோர்களையும், எனது சகோதரனின் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அக் கொடூரங்கள் நிகழும் இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்றேன். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து நந்திக்கடலை அண்மிக்கையில் இராணுவத்தினர் எம்மை கைகாட்டி அழைத்தனர். நாம் அவர்களை நோக்கி ஓடிச்சென்றோம். எம்மை அன்போடு அழைத்து, உடனடியாக எமக்கு உணவும் தண்ணீரும் வழங்கினர். நாம் ஆறு நாட்களாக உணவின்றி அல்லல்பட்டிருந்தோம். இராணுவத்தினருக்காக வந்திருந்த உணவையே எமக்கு வழங்கியிருந்தனர். உண்மையிலேயே அவர்கள் எமக்கு வழங்கிய உணவு பேரமுதமாகவே இருந்தது. எனது பிள்ளைகளுக்கு பிஸ்கட் பக்கட்டுக்களை வழங்கினர். முந்நேரமும் எவ்வித தடையுமின்றி எமக்கு உணவு வழங்கினர். எமக்காக சுத்தமாக நீரை பௌசர்களில் கொண்டு வந்து வழங்கினர்.

எனவே தமிழ் மக்களுக்கும், அவர்களது இயக்கத்திற்காக போராடிய தமது உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொடுமைகளை இழைத்துள்ள இப்பயங்கரவதிகளை எவ்வாறு ஒரு போராட்ட குழுவாக கருத முடியும். இவர்கள் தமிழ் மக்களுக்காக போராடிய குழுவொன்றல்ல என்பது இதில் இருந்து தெளிவாகின்றது.

இறுதிக்கட்ட போரின் போது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் உண்மையான சுயரூபத்தை நன்கு விளங்கிக்கொண்டுள்ளதோடு, அவர்களை முற்றா வெறுத்துள்ளனர்.

அதேவேளை இராணுவத்தின் உண்மையான மனிதாபிமானமிக்க சுயரூபத்தையும் இவர்கள் விளங்கிக்கொள்ளவும் தவறவில்லை. இலங்கை வாழ் தமிழ்மக்கள் தற்போது எவ்வித அச்சமும் இன்றி மிகவும் சந்தமாசமாகவும் நிம்மதியாகவும் தங்களது குடும்பங்களுடனும் தமது வாழ்கையை கொண்டு நடத்துகின்றனர்.

நன்றி விடிவு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com