மாணவர்களின் பாதயாத்திரைக்கு நீதிமன்று தடை உத்தரவு.
பேராதனையிலிருந்து கொழும்புக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் பாத யாத்திரைக்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றம், இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த பாத யாத்திரை, இன்றைய தினம் ஆரம்பமாகவிருந்தது. பேராதனை பொலிஸார் விடுத்த வேண்டுகொளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், பாத யாத்திரையை நிறுத்துமாறு, மாணவர் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
பாத யாத்திரை இடம்பெற்றால், கண்டி-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். மக்களின் அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்து, மோதல் நிலை உருவாகலாம். இதனால் சமாதானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமுண்டு. இதன் காரணமாக, நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக வளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment