இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் மூத்தோர் (மஜ்லிஸ் அன்சாருல்லாஹ்) பிரிவினர்களின் வருடாந்த தேசிய மாநாடு( இஜ்திமா) இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்து பலர் கலந்து கொண்டனர்.
விஷேட உரைகள் , உர்து நஸம் , இஸ்லாமிய வினா விடைப் போட்டி, பரிசளிப்பு என்பன அங்கு இடம் பெற்றதுடன், இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாமிய உரைகள் அடங்கிய இருவட்டுக்கள் என்பனவும் அங்கு விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment