அடைமழையினால் அவதியுறும் அம்பாரை மக்கள்.
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் அடைமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது கல்விப் பொதுத்தராதார சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளதனால் பரீட்சைக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இதே போன்று மழை காலங்களில் அக்கரைப்பற்று பிரதேசம் முற்று முழுதாக வெள்ளத்தில் மூழ்குவதனால் பொதுமக்கள் பல வருடங்களாக சொல்லொன்னா துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சில பாதைகளுக்கு கொங்கிறீட் இடப்பட்டிருந்தும் முறையான திட்டமிடல் இன்மையால் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அண்மையில் பல பிரதான பாதைகளுக்கு வடிகான்களுடன் பாதை அமைப்புக்கு அடிக்கல் நடப்பட்டிருந்தும் கொந்தராத்துக்காரர்களின் தரகு இழுபறி காரணமாக இன்னும் நிர்மாணங்கள் தொடரப்படவில்லை. எனவே அக்கரைப்பற்று மக்களின் நீண்டகால பாதை மற்றும் வடிகாலமைப்பு வசதிகள் உரிய அதிகாரிகளினால் நிவர்த்திக்கப்படுமா? ஏன கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments :
Post a Comment