தமிழ் வர்த்தகரைக் கொலை செய்த நால்வருக்கு ஆயுள் தண்டனை - பிரித்தானிய நீதிமன்றம்
பிரித்தானியாவில் தனது சொந்த வர்த்தக நிலையில் வைத்து 48 வயதுடைய சுப்பையா தர்மசீலன் என்ற நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ம் திகதி நால்வர் கொண்ட குழுவால் அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யப்பட்டார். சி.சி.TV என்னும் பாதுகாப்புக் கமரா மூலமாக தனது தந்தை அடித்துக் கொல்லப்பட்டும் காட்ச்சியை அவரது பிள்ளை பார்த்தும் உள்ளார்.
கொலையை தர்மசீலனின் பிள்ளை பாதுகாப்பு கமராவில் பார்த்ததால் அவர் பாரிய மனக்கஸ்டம் அடைந்திருப்பார் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிங்ஸ்டன் பகுதியில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் இந்த கொலை புரியப்பட்டுள்ளதாக பேர்மிங்காம் கிரவுன் நீதிமன்ற நீதிபதி வைன் வில்லியம்ஸ் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இரட்டையர்களான லேன் மற்றும் ஜோன் மீனன், எந்தனி பாய்லிஸ் மற்றும் அவருடைய இளைய சகோதரர் ஆகிய நால்வருக்கு 20 தொடக்கம் 27 வருட ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தர்மசீலனை சிறிய கத்தியால் நெஞ்சில் குத்திய லேன் மீனனுக்கு 27 வருட சிறை தண்டனையும் ஜோன் மீனனுக்கு 24 வருட சிறை தண்டனையும் ரியன் மற்றும் பயிலிஸ்ஸுக்கு முறையே 20 மற்றும் 21 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment