நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு பொதுநலவாய அமைப்பு பாராட்டு.
கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு பொதுநலவாய அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அந்நாட்டு புத்திஜீவிகளும் இதனை பாராட்டியுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கற்ற பாடங்கள் மற்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையூடாக பயங்கரவாதத்தின் கொடுமை தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொதுநலவாய அமைப்பு தெரிவிக்கிறது. மோதல்களின் உண்மைத்தன்மை உட்பட அதன் நம்பகத்தன்மையும் இதனூடாக வெளிக்காட்டப்படுவதாக பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதன் நேர்மையான தன்மைகளை உண்மையாக வெளிக்காட்ட முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களும் அரசாங்கமும் புதிய நிலைமையில் தமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்கின்றனர். இலங்கையின் பங்காளர்களாக நிரந்தர சமாதானத்திற்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கும் பொதுநலவாய அமைப்பு, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமென அவ்வமைப்பின் பொது செயலாளர் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தனிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகளினதும் புத்திஜீவிகளினமும் பாராட்டை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கை நேர்மைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தாம் பாராட்டுவதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமான எதிர்கால பயணத்திற்கு தயாராகவுள்ள இலங்கைக்கு அந்த பயணத்திற்கு செல்ல உதவி வழங்குமாறும், அப்பயணத்திற்கு தடை ஏற்படுத்தாமல் பொறுமையுடன் செயற்படுமாறும் பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.
0 comments :
Post a Comment