சீதுவை - அமன்தொழுவ பிரதேசத்தில் பிரபல்யமாக இருந்த தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தியும், இரும்பு கம்பிகளால் தாக்கியும் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகள் ஐவரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற சிரான் குணரத்ன தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா இரண்டு இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
சீதுவை –அமன்தொழுவ, வேத்தேவ - தெவலபொல மற்றும் வல்பொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
2001 ,டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி சீதுவை பிரதேசத்தில் வைத்;து மஹிந்த ஜயரத்ன சில்வா என்ற டியூசன் ஆசிரியரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் ஆசிரியரை கொலை செய்த பின்னர் அவரது மோட்டார் சைக்கிளையும் கடத்தி சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment