இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்பாணத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க திட்டம்.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு, சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில், 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், பல திட்டங்களை மேற்கொள்ள, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நிதி, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளுக்கும், இரணைமடு குளத்திலிருந்து குழாய் மூலம் சுத்தமான நீரை பெற்றுக்கொடுக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
நிலக்கீழ் நீரூடன் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையிலான செயற்திட்டமும், கழிவு நீரை சீரான முறையில் அகற்றும் செயற்திட்டமும், முன்னெடுக்கப்படவுள்ளன.
பழைய நீர் வடிகாலமைப்புகள் மூலம், சுத்தமான நீர் கசிந்து, வீண் விரயமாவதை தடுக்கவும், சீரான வடிகாலமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், ஒஸ்ரியா, கொரியா போன்ற நாடுகள் உட்பட ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிகா ஆகிய அமைப்புகளும், நாட்டின் பல பாகங்களில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறையினை சீர் செய்வதற்கு, பாரிய நிதி உதவிகளை அளித்து வருகின்றது.
0 comments :
Post a Comment