Wednesday, December 7, 2011

நகர்ப்புறச் சூழலிலுள்ள சிறைச்சாலைகள் காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்படும்போது, அவர்களது மனோதத்துவ நிலைமையை மேம்படுத்துவதற்கு, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மனவள அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில், சிறைச்சாலைகளை புனரமைப்பதற்கு, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக நகர்ப்புறச்சூழலிலிருந்து விடுபட்டு, அதிக வசதி மற்றும் வாய்ப்புகள் கொண்ட இடங்களில் சிறைசாலைகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீட்டில் இத்திட்டத்திற்காக, மேலதிகமாக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், தங்காலை சிறைச்சாலை, அங்குனுகொலபெலஸ்ஸவிற்கும், போகம்பர சிறைச்சாலை பல்லேகலவிற்கும், வெலிகட சிறைச்சாலை, மஹரவுக்கும் மாற்றப்படவுள்ளது.

No comments:

Post a Comment