வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் யோங் இல்லின் பூதவுடல் தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்நாட்டு தொலைக்காட்சி ஊடாக நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான வடகொரிய மக்கள் தமது இறுதி அஞ்சலிசெலுத்துவதற்காக பியோங் யெங் சுற்று வட்டத்திற்கு வருகை தந்தனர். மறைந்த தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கிம் யோங் இல்லின் மறைவை தொடர்ந்து அப்பதவிக்கு அவரது இளைய மகன் கிம் யோங் உன் தெரிவு செய்யப்படுவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment