மண் ஏற்றும் டிப்பர் வாகனச் சாரதியிடம் மதுபானப் போத்தல் ஒன்றினை வாங்குவதற்கு 1000 ரூபா பணம் இலஞ்சம் கேட்டார் எனக் கூறப்படும்; யாழ்பாணம் வட்டுக் கோட்டை பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணம்கொடுக்க மறுத்தபோது குறிப்பிட்ட அதிகாரி தன்னை தாக்கவந்தாக டிப்பர் வாகனச் சாரதி பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து இவ்விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இவ்விசாரணை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment