காத்தான்குடி இளைஞர் சவுதியில் தற்கொலை....
சவூதி அரேபியாவில் காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் கப்பார் அஷ்ரப்(வயது22) என்பவருடைய ஜனாஸா சவூதி அரேபியாவில் உள்ள அப்ரல்பாத் எனும் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22 நாட்களுக்கு முன்னர் இவர் சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு சென்றுள்ளார். சாரதி தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றுள்ள இவர் கடந்த இரு நாட்களாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இவர் தங்கியிருந்த அறை உடைத்துப் பார்க்கப்பட்டபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவரது மரனம் தொடர்பான உறுதியான எந்த தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை .
ஜீனைட்.எம்.பஹ்த்
0 comments :
Post a Comment