பிளாஸ்டிக் பெட்டி விவகாரம் ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தம்
மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்லும் போது அவை பிளாஸ்டிக் பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அக்காலப்பகுதியில் வர்த்தகர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் ஜனாதிபதி, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment