Wednesday, December 14, 2011

பள்ளிவாயல் விவகாரம் : ஆணைக்கு அறிக்கை முதலமைச்சருக்கு செல்கின்றது.

அட்டாளைச்சேனை பொதுச்சந்தைக் கட்டடம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை நாளை 15ம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதான வீதி வாசிகசாலை அருகில் பொதுச்சந்தைக்கட்டடம் அமைப்பதனால் பெரிய பள்ளிவாசல் மறைக்கப்படுவதாக சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சரினால், கிழக்கு மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தலைமையிலான, மாகாணசபை உறுப்பினர் எஸ்.புஸ்பராஜா, கிழக்கு மாகாண ஆளுனரின் உதவிச் செயலாளர் எஸ்.கே.ஜெயரட்ணம், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாத், முதலமைச்சர் செயலக செயலாளர் வ.சச்சிதானந்தம் ஆகியோர் கொண்ட ஆணைக்குழு கடந்த மாதம்
நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் முன் பொதுமக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், பிரதேசசபை தவிசாளர், உதவித் தவிசாளர் மற்றும் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு கடந்த இரண்டு நாட்களாக சாட்சியமளித்த பின்னர் இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கைக்கு ஏற்றவாறு பொதுச்சந்தைக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com