வேலையில்லா பட்டதாரிகள் யாழில் ஆர்ப்பாட்டம். வீடியோ இணைப்பு
யாழ்.மாவட்டத்தினை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரச பதவிகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.யாழ்.நகரின் பெருமாள் கோவில் முன்றலில் ஆரம்பமான இவ்வூர்வலம் ஸ்ரான்லி வீதி மற்றும் கோவில் வீதியூடாக சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினை சென்றடைந்திருந்தது.சுமார் 1000 வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் இவ்வார்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.ஆர்ப்பாட்ட முடிவினில் மகஜரொன்றினை அவர்கள் ஆளுனரின் செயலாளர் இடம் கையளித்திருந்தனர்.ஏற்கனவே வேலையில் நிரந்தர நியமனங்கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றினை அண்மையில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment