Friday, December 9, 2011

உதயன் ஆசிரியர் பீடத்தில் முன்னாள் புலிகள்.

யாழ் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திற்கு முன்னாள் புலிகள் சிலர் உள்ளவாங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. ஜெகநாதன் (78 வயது) , இவர் முன்னர் புலிகளின் நிர்வாகத் துறையில் மொழிபெயர்பாளராக கடமை ஆற்றி வந்தவர். இவர் தற்போது உதயன் ஆசிரியர் பீடத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும் விவேகானந்தன் என்பவரும் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் புலிகளின் சஞ்சிகைகள் ஒன்றுக்காக எழுதிவந்தவர்.

ஜெகநாதன் சரவணபவான் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம் விவேகானந்தன் குகநாதன் தங்கியிருந்த இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். குகநாதன், மீது தனிப்பட்ட குரோதம் காரணமாக தாக்குதல் நாடாத்தப்பட்டதும், அதற்கு வேறு வடிவம் கொடுத்து உதயன் அரசியல் லாபம் தேடிக்கொண்டதும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் குகநாதன் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

மேலும் இந்நியமனங்களால் உதயன் ஆசிரியர் பீடத்தில் பிளவு உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது. இத்தனைகாலமும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் செல்வாக்கு செலுத்திவந்த பிறேம், புறக்கணிக்கப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக உதயன் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

வர்த்தகரான சரவணபவான் அரசியல்வாதியாக மாறியதை அடுத்து உதயன் கட்சியொன்றின் உத்தியோகபூர்வ பத்திரிகையாக மாறியுள்ளதாக அதன் ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com