இலங்கைப் படையினரின் சேவையை பாராட்டுகின்றது ஐ.நா.
அமைதி காக்கும் நடவடிக்கைகளின்போது, இந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் ஆற்றப்படுகின்ற சேவைகளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. இதற்கமைய, அமைதி காக்கும் படைக்கென இந்நாட்டு பாதுகாப்பு படையை சேர்ந்த மேலும் பல உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமைதி காக்கும் படையில் இணைந்து கொள்ளும் 13 ஆவது மேலதிக படையணியாக, இது கருதப்படுகிறது. இந்தப்படையில் இராணுவத்தை சேர்ந்த 110 பேரும், விமானப்படையை சேர்ந்த 44 பேரும், கடற்படையை சேர்ந்த 46 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 7 அதிகாரிகளும், இவ்வணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹெயிட்டி ராச்சியத்தின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கென செல்லவுள்ள இந்த படையணியை வழியனுப்பும் நிகழ்வு, முகத்துவாரத்தில் இடம்பெற்றது. ஹெயிட்டி ராச்சியத்தில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் 750 பேர், தற்போது சேவையாற்றி வருகின்றனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்வில், பிரிகேடியர் ஐ.பீ. ரணசிங்க உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment