வன்னி வேலையற்ற பட்டதாரிகள் விபரம் சேகரிப்பு. ஜேவிபி யின் வலையில் சிக்குவார்களா?
வன்னி மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்களை சேகரிக்கும் நிகழ்வுகள் கடந்த 1ம் திகதி முதல் 5ம் திகதி வரை வவுனியா சுத்தானந்தா இந்து மன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது. வன்னி வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ஆர் . ஜெயமோகன் தலைமையில் இத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவுகளின்போது மன்னார் மாவட்டத்திலிருந்து 251 பேரும், வவுனியா மாவட்டத்திலிருந்து 211 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 153 பேரும் பட்டங்களைப் பெற்று வேலையற்று இருப்பதாக பதிவாகியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடு ஜேவீபி யின் உந்துதலின்பேரில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
நாடுபூராகவும் எதிர்ப்பலைகளை கிளப்பி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் ஜேவிபி யினர் இவ்வாறான சங்கங்களுக்கு புத்துயிர் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வட கிழக்கு உட்பட இலங்கையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பலவற்றினதும் பின்னணியில் ஜேவிபி யினரே உள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட சங்கத்தினரை தட்டியெழுப்பும் ஜேவிபியினர் அவர்களையும் வன்னியில் ஆhபாட்டம் ஒன்றை நடாத்துமாறு ஊக்குவிக்கலாம் என நம்பப்படுகின்றது. ஜேவிபி யின் சுயலாப அரசியலுக்காக வன்னி மேற்படி சங்கத்தினரும் துணைபோவார்களா?
பதிவுகளை மேற்கொண்டபோது எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்.
0 comments :
Post a Comment