Wednesday, December 7, 2011

மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது ஈரான்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மசகு எண்ணெய்யின் விலை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரிக்குமென்று மேற்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் செய்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒரு பீப்பா மசகு எண்ணெயின் விலை 250 டொலருக்கு மேல் அதிகரிக்கும் என்று கூறினார்.

தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதுரகத்தினுள் சென்ற வாரம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்கு உலக நாடுகள் தெரிவித்த கண்டனங்களுக்கு பதில் நடவடிக்கையாக ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அணுக்குண்டை தயாரிப்பதற்கு ஈரான் சகலவித நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறதென்ற வகையிலான ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்று நவம்பர் மாதத்தில் வெளியானதை அடுத்து அந்த நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ஐரோப்பிய சமூக நாடுகளும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.

அணுக்குண்டு உற்பத்தியில் அணுசக்தி உபயோகிக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள ஈரான், சமாதான நடவடிக்கைகளுக்காகவே அணுசக்தி உபயோகிக்கப்படுகிறதென்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment