டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதற்கான செயற்திட்டம் ஒன்றை முன்வைக்காவிடின் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் இணைத்துக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஆர்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக்க ரணசிங்க நேற்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளதாகவும், இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளின் பிரச்சினையை அரசு மறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் வேலை தரப்படும் என பொய் கூறுவதை நிறுத்திவிட்டு டிசம்பர் 31ம் திகதிக்கு முன் முறையான செயற்திட்டம் ஒன்றை சமர்பிக்குமாறும் ,அவ்வாறு சமர்பிக்காவிடின் ஜனவரி மாதம் தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள், ஆர்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment