Wednesday, December 14, 2011

இராணுவ சீருடையில் நடமாடிய நபர் பொலிசாரால் கைது

இராணுவ வீரர் போன்று நடித்த ஒருவரை நீர்கொழும்பு பொலிசார் கைது செய்துள்ளனர் . இராணுவ சீருடையில் நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு வந்த போது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் இராணுவ பயிற்சி பெற்றதன் பின்னர் சேவைக்கு செல்லாதவர் என்றும், இராணுவத்தில் சேர்ந்து ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை பெற்றுள்ளவர் என்றும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் குளியாப்பிட்டியவிலிருந்து நீர்கொழும்பு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் இராணுவ சீருடையில் பஸ்ஸில் பயணிக்கும் போது பயணச்சீட்டு (டிக்கட்) எடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் , அதன் காரணமாக இராணுவ சீருடையில் பஸ்ஸில் பயணித்ததாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com