Friday, December 23, 2011

புலம்பெயர் தமிழர் நினைத்தால் யாழில் விபச்சாரத்தை தடுக்கமுடியும்.

வறுமை காரணமாக யாழ் குடாநாட்டில் பல விதவைப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், ஆடம்பரமாக கொண்டாடும் விழாக்களுக்கு செலவிடும் பணத்தில் சிறுதொகையையாவது சேர்த்து இவ்விதவைகளின் வாழ்வை மேம்படுத்த புலம்பெயர் தமிழர் முன்வருவார்களானால் நிலைமையை சீர் செய்ய முடியும் என யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை 23ம் திகதி நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் போதே மேற்படி கூறினார்.

போர் மற்றும் ஏனைய சூழ் நிலைகளினால் யாழ்ப்பாணத்தில் 29ஆயிரம் பெண்கள் விதவையாகியுள்ளனர்.

வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டு தடுப்பதற்கு அவர்களின் தேவை இணங்காணப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படவேண்டும்.

புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை அரசாங்கம்
புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன, ஆனால் அவர்களும் எம்மைப் போன்றவர்களே என்று உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களை புறக்கணிப்பது சமூகமே தவிர, அரசாங்கம் இல்லை என அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  December 24, 2011 at 7:34 PM  

Poverty is the main cause for the misbehaviour or petty crimes. What the Honoured GA of Jaffna said was perfectly alright,we regret there is no one to sympathize the pathetic situation of the affected women except a handful of sympathizers.Hope the GA would organize some charities to help this women and the orphan children to get rid of their difficulties.We're pretty sure there are a handful of displaced sympathizers.They would certainly help to the charities.
This can be approached through the
tamil channel (DAN) Hope It may be having many viewers around the world

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com