சுவிற்சர்லாந்தில் புலிகளின் நிதிப்பொறுப்பாளராக இருந்தவர் அப்துல்லா. இவர் மக்களின் பெரும்தொகையான பணத்தினை சுருட்டி வைத்துள்ளார். புலிகளின் தலைமை ஒழிக்கப்பட்ட பின்னர், தற்போது வின்ரத்தூர் எனும் இடத்தில் ரெஸ்ருரண்டு ஒன்று நடாத்தி வருகின்றார். பல மாதங்களாக தனது கடையில் வேலை செய்த சாந்தன் என்ற இளைஞனுக்கு ஊதியம் வழங்க மறுத்துள்ளார்.
குறிப்பிட்ட இளைஞன் சம்பளம் கேட்டபோது, நீ இயக்கத்துக்குத்தானே வேலை செய்தாய் இப்போது சம்பளம் கேட்கின்றாய் என பேசிக் கலைத்து விட்டாராம் அப்துல்லா.
சுவிற்சர்லாந்தில் மக்களிடம் புலிகள் கடன்பெற்றிருந்தனர், அக்கடனை கொத்துரொட்டி விற்று செலுத்தப்போகின்றோம் என அறிவித்திருந்தனர். சுவிற்சர்லாந்தில் கொத்துரொட்டிக்கு ஏகப்பிரதிநிதிகள் ஆகிய புலிகள் வேறு கடைகளில் கொத்து ரொட்டி விற்ககூடாது என அறிவித்திருந்ததுடன், அப்துல்லாவின் ரெஸ்டுரண்டிலேயே கொத்து அடிக்கப்பட்டது. அக்கடையில் வேலை செய்தவர்தான் சாந்தன்.
இயக்கத்திற்கு என சம்பளம் வழங்காமல் பலரிடம் இவ்வாறு வேலை பெற்றுக்கொண்ட அப்துல்லா இறுதியில் கொத்துரொட்டிக்கு கணக்கும் காட்டவில்லை என சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.
லட்சக்கணக்கான பிராங்குகளை பதுக்கி வைத்துள்ள அப்துல்லா தமிழ் உணர்விவுடன் வேலைசெய்த குறிப்பிட்ட இளைஞனுக்கு ஊதியத்தைகூட வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment