Friday, December 30, 2011

பிரபாகரனின் பிரதான மெய்பாதுகாவலருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களின் பிரதானியாக செயற்பட்டவர் எனக் கருதப்படும் மண்ணிலவன் என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபஷ் முன்னிலையில் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திகையை தாக்கல் செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இவர் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களின் பிரதானியாகவும் அவருடைய தனியான பாதுகாப்பு பிரிவின் கட்டளையிடும் பொறுப்பாளராகவும் செயற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகநபர் வெளிநாட்டவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திகை சமர்ப்பித்த பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை பூசா முகாமில் தடுத்து வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment