Friday, December 30, 2011

வட கொரிய இளம் தலைவருக்கு புதிய பதவி.

வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராக, கிம் ஜாங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் இல், கடந்த 17ம் தேதி மாரடைப்பால் காலமானார். வட கொரிய அரசியலில், தொழிலாளர் கட்சி, ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் தான் பலம் வாய்ந்தவை. இவை தான், நாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும். மறைந்த தலைவர் கிம் ஜாங் இல், இந்த மூன்றுக்கும் தலைவராக இருந்தார்.

அவரது மறைவை அடுத்து, அவரின் இளைய மகன் கிம் ஜாங் உன், ராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் தலைவராகவும், அவரை அரசு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அவர் வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராகியுள் ளார். கிம் ஜாங் இல்லின் இரண்டாவது நாள் இறுதிச் சடங்கு, தலைநகரில் உள்ள கிம் சங் சதுக்கத்தில், நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜாங் உன்னுக்கு, ராணுவ தளபதிகள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment