ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியா பயணமனார்.
இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பேங்பேங் யுதயானோவின் விசேட அழைப்பின் பேரில் 4வது பாலி ஜனநாயக சம்மேளன மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி இன்று முற்பகல் இந்தோனேசியாவிற்கு பயணமானார். சம்மேளன மாநாடு நாளையும் நாளை மறுதினமும் பாலி தீவிலுள்ள நுஷா டுவா சர்வதேச சம்மேளன மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிய நாடுகளுக்கு இடையில் ஜனநாயகம் மற்றும் அரசியல் அபிவிருத்தி தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தோனேசிய ஜனாதிபதியினால் சம்மேளன மாநாடு 2008 ஆம் ஆண்டு ஆரம்பமானது. மாறும் உலகில் ஜனநாயக பங்களிப்பின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக குரலுக்கு பதிலளித்தல் என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும்.
ஆசிய பிராந்தியத்திலிருந்து 54 நாடுகள் கலந்து கொள்ளும் சம்மேளன மாநாட்டில் 15 நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஊழியர் படையணியின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment