ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜாத். சில நாட்களுக்கு முன்பு இவர் வடமேற்கு பகுதியில் உள்ள உருமியே நகருக்கு சென்று இருந்தார். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரம் கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி அதிபர் அகமதினேஜாத் மீது வீசினார். ஆனால் அது அவர் மீது விழவில்லை.கார் மீது விழுந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே அவரது பாதுகாவலர்கள் ஷூ வீசியவரை கூட்டத்தில் தேடினார்கள். ஆனால் அவர்களால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது முன்டாசர் அல்-ஷாய்தி என்ற பத்திரிகை நிருபர் ஷூவை கழற்றி வீசினார். அப்போது அவரை ஹீரோ என ஈரான் அரசு வானளாவ புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment