சரத் பொன்சேகா ஜனவரி முதலாம் திகதி விடுதலையாவார்?
ஹைகோர்ப் வழக்கில் 30 மாத சிறைத்தண்டனையும் வெள்ளைக்கொடி வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள , முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ், ஜனவரி முதலாம் திகதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடத்திய கலந்துரையாடல்கள் வெற்றிகரமான பெறுபேற்றின் விளைவாகவே இந்த மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை கோரியிருந்தனர்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் சரத் பொன்சேகாவுக்கு இம்மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இம்மன்னிப்பின் பின்னர் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment