Sunday, December 18, 2011

முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு தீர்மானமும் இல்லையாம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதுது.

இச்சந்திப்பின் போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறியுள்ளார். அரசுடனான கடந்த சில சந்திப்புகளின்போது இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அதிமுக்கிய விடயங்களான பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமாகப் பேசப்பட்டதையும் அவர் தெரிய ப்படுத்தியுள்ளார். அடிப்படையில் முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்து ஒருமைப்பாடு இன்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமது தரப்பினர் மேற்கொள்ளப்பேவதில்லை என சம்பந்தன் உறுதியளித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment