காதலன் உட்பட இரு சகோதரிகள் ஒரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை பொலிஸாரால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எப்பாவல கடிகாவப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 மற்றும் 15 வயதுடைய இரண்டு இளவயது பெண்களும் 27 வயதுடைய இளைஞன் ஒருவனதும் சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
.
உயிரிழந்துள்ள பெண்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். 17 வயதுடைய பெண்ணின் காதலனே உயிரிழந்த ஆண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படாத நிலையில், எப்பாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment