பன்னலையில் சொசேஜஸ் தயாரிப்பிற்கு பொருத்தமற்ற உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டதை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். இவற்கை அழிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பன்னலை மாகந்துர பிரதேச்தில் இயங்கி வந்த தொழிற்சாலையொன்றை முற்றுகையிட்ட போது இந்த காலாவதியான உணவு பண்டங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றில் எலும்பு நீக்கப்பட்ட ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 750 கிலோ கிராம் எடை கொண்ட கோழி இறைச்சி 71 ஆயிரத்து 563 கிலோ சொசேஜஸ் , 32 ஆயிரத்து 992 சோயா மா ஆகியன இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவை நுகர்வுக்கு பொருத்தமற்று காணப்பட்டதால் அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குளியாப்பிட்;டிய நீதி மன்றம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இவை அழிக்கப்பட்டன. இவ் உணவு பண்டங்களின் மொத்த பெறுமதி 5 கோடி ரூபாவாகும். இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் சொசேஜஸ்களில் 80 வீதமானவை ஏற்றுமதிக்கும் 20 வீதமானவை உள்ளுர் சந்தைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment