Sunday, December 11, 2011

இந்திய முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்ய அதீத ஆர்வம்.

பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக, பல இந்திய கம்பனிகள், இலங்கையில் முதலீடு செய்ய தயாராகியுள்ளதாக, ப்ரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் சர்வதேச கணக்காய்வு நிருவகம் தெரிவிக்கிறது.

இந்நிறுவனம் கொழும்பில் நடாத்திய வர்த்தக சந்திப்பிலேயே, இவ்வாறு தெரிவித்தது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் முதலீடு செய்வதை விட, இலங்கை போன்ற துரித அபிவிருத்தியை எட்டி வரும் நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் கூடுதலான பயன்களை பெற முடியுமென, இந்திய கம்பனிகளின் பிரதிநிதிகள், நம்பிக்கை வெளியிட்டனர்.

இலங்கை அரசாங்கம், முதலீட்டாளர்களுக்கென வழங்கும் வசதிகளை போன்று, ஊக்குவிப்புகள், இலங்கையின் முதலீட்டுக்கான கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, கம்பனியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment